வானவில் : தாம்சன் யு.டி9 4 கே


வானவில் : தாம்சன் யு.டி9 4 கே
x
தினத்தந்தி 3 April 2019 5:18 PM IST (Updated: 3 April 2019 5:18 PM IST)
t-max-icont-min-icon

தாம்சன் நிறுவனம் டி.வி. தயாரிப்பில் பழமையான முன்னோடி நிறுவனமாகும். ஜப்பானிய வரவுகள் மற்றும் தென் கொரிய தயாரிப்புகளின் போட்டியை சமாளிக்க முடியாமல் இது சில காலம் முடங்கிப் போனது.

இப்போது நொய்டாவைச் சேர்ந்த சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்நிறுவன தயாரிப்புகளுக்கு லைசென்ஸ் பெற்று டி.வி. தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம் 40 அங்குல 4 கே ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.20,999. இது பிளிப்கார்ட் இணையதளத்தில் கிடைக்கும். இது 4 கே ரெசல்யூஷனைக் கொண்ட ஸ்மார்ட் டி.வி.யாகும். ஹெச்.டி.ஆர். 10 மற்றும் 20 வாட் ஆடியோ அவுட்புட் கொண்டது. இதில் 3 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், 2 யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ஸ்டாண்டர்ட் ரெபரெஷ் உள்ளது. இந்த டி.வி.யுடன் 6 பதிவேற்றப்பட்ட செயலிகள் உள்ளன. யு டியூப், கூகுள் பிளே பேக் 4 கே வீடியோ பார்க்கும் வசதியும் கொண்டது. இதில் பிரைட்னெஸ் அளவு 550 நிட்ஸ் ஆகும்.

கூடுதலாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ ஆகியவற்றின் பிரத்யேக செயலிகள் இந்த டி.வி.யில் கிடைக்கின்றன.

அத்துடன் இது ஆண்ட்ராய்டு 7.1 இயங்குதளத்தில் செயல்படுகிறது. இந்நிறுவனம் 50 மற்றும் 55 அங்குலம் டி.வி.க்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் 55 அங்குல டி.வி. விலை ரூ.37,999 ஆகும். எஸ்.பி.பி.எல். நிறுவனம் 1990-ம் ஆண்டிலிருந்து டி.வி. உதிரி பாகங்களை தயாரித்து முன்னணி பிராண்டுகளுக்கு வழங்கி வந்தது. இந்நிறுவனம் சி.ஆர்.டி. டியூப் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது. அத்துடன் கோடக் நிறுவன டி.வி.க்களையும் விற்பனை செய்து வந்தது. இப்போது தாம்சன் நிறுவன டி.வி.க்களை குறைந்த விலையில் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களோடு அறிமுகம் செய்துள்ளது.

Next Story