வானவில் : சாம்சங்கின் 6 சீரிஸ்


வானவில் : சாம்சங்கின் 6 சீரிஸ்
x
தினத்தந்தி 3 April 2019 6:05 PM IST (Updated: 3 April 2019 6:05 PM IST)
t-max-icont-min-icon

மின்னணு பொருள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் தனது பிரபல 6 சீரிஸ் வரிசையில் ஸ்மார்ட் டி.வி.க்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இவை 43, 50, 55அங்குல அளவுகளில் 6 சீரிஸ் வரிசையில் அறிமுகமாகியுள்ளது. இந்த டி.வி.க்களில் 6 வகையான சிறப்பம்சங்கள் உள்ளன. லைவ் காஸ்ட், டியூன் ஸ்டேஷன், ஸ்கிரீன் மிரரிங், லாக் பிரீ கேமிங், ரியல் 4 கே ரெசல்யூஷன் மற்றும் 60 கே டைட்டில் ஆகிய வசதிகள் இதில் உள்ளன. 43 அங்குல டி.வி. அறிமுக சலுகையாக ரூ.41,990 என விலை நிர்ணயம் செய்துள்ளது சாம்சங். 50 அங்குல டி.வி. விலை ரூ.51,990. மற்றொரு மாடலான 55 அங்குல டி.வி. விலை ரூ.61,990. இந்த டி.வி.க்களுக்கு அறிமுக சலுகையாக ரூ.2 ஆயிரம் தள்ளுபடி தரப்படும். இதில் டைசென் இயங்குதளம் உள்ளது. அத்துடன் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூ டியூப், கூகுள் பிளே மூவிஸ் அண்ட் டி.வி., யூ டியூப் கிட்ஸ், ஜியோ சினிமா, பிக் பிளிக்ஸ், எரோஸ் நவ், சோனி லிவ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஆகிய செயலிகள் உள்ளன.

இவை தவிர இவற்றில் 20 வாட் ஸ்பீக்கர், 2 ஹெச்.டி.எம்.ஐ. போர்ட், ஒரு யு.எஸ்.பி. போர்ட் மற்றும் 4 கே எல்.இ.டி. திரையைக் கொண்டது. 

Next Story