அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மத்தியில், மோடி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி பிரேமலதா பிரசாரம்
40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி என திருவாரூரில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் பழைய பஸ் நிலைய ரவுண்டானா அருகில் நாகை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன், திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜீவானந்தம் ஆகியோரை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நேற்று பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விஜயகாந்த் சூப்பராக இருக்கிறார். உங்களை எல்லாம் கேட்டதாக சொல்ல சொன்னார். நிச்சயமாக அவர் தேர்தல் பிரசாரத்திற்கு வருவார். அ.தி.மு.க. கூட்டணி சாதாரண கூட்டணி அல்ல. மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மெகா கூட்டணி. பலரது சூழ்ச்சிகளை தாண்டி மாபெரும் வெற்றிக்கூட்டணி அமைந்துள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டில் ஜெயலலிதாவும், விஜயகாந்தும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றார்கள். தற்போது மீண்டும் வரலாற்று கூட்டணி அமைத்துள்ளனர். இது ராசியான கூட்டணி. எனவே அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே தேவையில்லை.
இந்த தேர்தல் என்பது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகத்தான். திருவாரூர் தொகுதியில் கூத்தாநல்லூர் தனி தாலுகா அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் விரிவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புற சாலைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது திருவாரூரில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். பகல் நேரத்தில் திருவாரூரில் இருந்து சென்னைக்கு ரெயில் இயக்கப்படும். மடப்புரம்-தஞ்சை சாலையை இணைக்கும் பாலமும், சீனிவாசபுரத்தில் அமைந்துள்ள பாலமும் விரிவாக்கம் செய்து புதிய பாலங்கள் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேற்றி தரப்படும்.
திருவாரூரின் சிறப்பே ஆழித்தேர் தான். அத்தகைய பெருமை வாய்ந்த ஊரில் மேலும் பல வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். திருவாரூர் தொகுதியை பொருத்தவரை 2 வாக்குகள் அளிக்க வேண்டும். அ.தி.மு.க. வாக்குகளை பிரிக்க சூழ்ச்சி நடக்கிறது.
எனவே வாக்காளர்கள் சிந்தித்து சரியாக வாக்களிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி. மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே ஒரே கூட்டணியில் உள்ளதால் திருவாரூருக்கு எந்த தேவையாக இருந்தாலும் அது நிச்சயம் நிறைவேற்றி தரப்படும்.
பூவும், இலையும், பழமும் இணைந்து வெற்றி முரசு கொட்டுகிற வெற்றி கூட்டணி எங்கள் கூட்டணி. இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இருக்கின்ற கூட்டணி கட்சியினர் தான் நாளைய உள்ளாட்சி பதவிகளுக்கு வரப்போகிறீர்கள். எனவே அனைவரும் ஒன்றிணைந்து அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
கஜா புயலின்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உத்தரவின்படி ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே எதிரணியினர் டெபாசிட் இழக்கும் வகையில் நாகை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சரவணன், திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜீவானந்தம் ஆகியோருக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது அமைச்சர் ஆர்.காமராஜ், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர் மணிகண்டன், நகர செயலாளர் மூர்த்தி, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சண்முகராஜ், நகர செயலாளர் சதீஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story