புதுவை தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் பிடித்த மாநில அந்தஸ்து கோரிக்கை
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மாநில அந்தஸ்து கோரிக்கையை முக்கிய கோஷமாக இடம்பெற்றுள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும் போதிய அதிகாரம் இல்லை என்பது நீண்டகாலமாக பெருங் குறையாக இருந்த வருகிறது. இதனால் எந்த கட்சி ஆட்சி வந்தாலும் மாநில அந்தஸ்து கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்படுவது வழக்கமான ஒன்றானது.
அதிலும் தேர்தல் வந்த விட்டால் அரசியல் கட்சிகளிடையே மாநில அந்தஸ்து தொடர்பான கோரிக்கை ஓங்கி ஒலிக்கும். இந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கோரிக்கை ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. அதாவது காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று இருந்தபோதிலும் மாநில அந்தஸ்து குறித்த வாக்குறுதி முக்கியமாக வலியுறுத்தப்பட்டு இருந்தது.
தேர்தல் பிரசாரத்தின்போதும் மாநில அந்தஸ்து விவகாரம் தவிர்க்க முடியாத விவாத பொருளாக மாறிவிட்டது. மாநில அந்தஸ்துக்காக தங்கள் ஆட்சிக்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக வாக்காளர்களிடம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் விளக்கி பிரசாரம் செய்து வருகிறார்கள்.
சிறப்பு மாநில அந்தஸ்து என்று பேசி வந்த காங்கிரஸ் கட்சியும் சமீப காலமாக மாநில அந்தஸ்து பெறவேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமரானதும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திடுவார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பிரசாரம் செய்து வருகிறார்.
பிரதான எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, தனது ஆட்சிக்காலத்தில் பலமுறை மாநில அந்தஸ்து கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், மத்திய மந்திரியாக இருந்த நாராயணசாமியும் மறுத்து விட்டனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று பிரசாரம் செய்து வருகிறார்.
அ.தி.மு.க. ஆதரவுடன் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடந்தபோது பிரதமராக இருந்த வாஜ்பாய் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கொள்கை முடிவு எடுத்ததாகவும், அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகவும் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தனது பங்கிற்கு பிரசாரத்தில் பேசி வருகிறார்.
அரசியல் கட்சிகளிடையே வெவ்வேறு கொள்கைகள் இருந்தாலும் மாநில அந்தஸ்து பெறுவதில் தற்போது ஒருமித்த குரலை எழுப்பி வருகின்றன. இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் கனிந்துள்ளன என்பது மட்டும் நிச்சயம். எனவே கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக நின்று இந்த கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Tags :
Next Story