தேர்தல் நடத்தை விதிமீறல்: 3 பேர் மீது வழக்குப்பதிவு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்காவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்படுகிறதா? என்று அரசு அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் கல்லுகுறிக்கி பகுதியில் அனுமதியின்றி 20 தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டிருந்ததாக கிராம நிர்வாக அலுவலர் சுக பிரவர்த்தணன் மகராஜகடை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம், கல்லுகுறுக்கி தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்தங்கரை அருகே சலகனேரி மோட்டூர் பகுதியில் சுவற்றில் அனுமதியின்றி காங்கிரஸ் சின்னம் வரைந்தது தொடர்பாக ஊத்தங்கரை பகுதி தி.மு.க. பிரமுகர் சாரதி (வயது 50) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே போல ஊத்தங்கரை பகுதியில் அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்ததாக அ.தி.மு.க. உறுப்பினர் ஆறுமுகம் (54) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story