சென்னை தியாகராயநகரில் நகைக்கடையில் 250 பவுன் நகை திருட்டு 2 ஊழியர்கள் கைது


சென்னை தியாகராயநகரில் நகைக்கடையில் 250 பவுன் நகை திருட்டு 2 ஊழியர்கள் கைது
x
தினத்தந்தி 4 April 2019 9:30 PM GMT (Updated: 4 April 2019 6:58 PM GMT)

சென்னை தியாகராயநகரில் தாங்கள் வேலை பார்த்த கடையில் 250 பவுன் தங்க நகைகளை திருடியதாக ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை தியாகராயநகர் ஜி.என்.செட்டி ரோட்டில் பிரபல நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடையில் கடந்த 10 ஆண்டுகளாக லியோ ஜானி (வயது 33), அம்ஜத் (35) ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். பழைய நகைகளை வாங்கும் பிரிவில் இவர்கள் வேலை செய்தனர்.

இருவரும் சிறுக, சிறுக சுமார் 250 பவுன் தங்க நகைகளை கடையில் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

கடையில் இருந்த கண் காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது ஊழியர்கள் 2 பேரும் நகைகளை திருடியது உறுதியானது. இதனையடுத்து லியோ ஜானியும், அம்ஜத்தும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தாங்கள் திருடிய நகைகளை அடகு கடை ஒன்றில் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. குறிப்பிட்ட அடகு கடையில் இருந்து 150 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் 100 பவுன் நகைகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதுதொடர்பாக பெண் ஊழியர் ஒருவரிடமும் விசாரணை நடக்கிறது.

Next Story