காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடுகள் தயார் கலெக்டர் விக்ராந்த்ராஜா தகவல்


காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடுகள் தயார் கலெக்டர் விக்ராந்த்ராஜா தகவல்
x
தினத்தந்தி 5 April 2019 4:00 AM IST (Updated: 5 April 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடத்த ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக கலெக்டர் விக்ராந்த்ராஜா கூறினார்.

காரைக்கால்,

வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகளின் பாதுகாப்பு குறித்து, மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான விக்ராந்த்ராஜா நேற்று ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தயார் நிலையில்...

காரைக்கால் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முடியும் வரை அனைத்து ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்களையும் சோதனையிடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஆய்வின்போது மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story