ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் முற்றிலும் கைவிடப்படும் - வேல்முருகன் பேச்சு


ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் முற்றிலும் கைவிடப்படும் - வேல்முருகன் பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 4:15 AM IST (Updated: 5 April 2019 11:43 PM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைந்ததும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் முற்றிலும் கைவிடப்படும் என்று செம்பனார்கோவிலில், வேல்முருகன் கூறினார்.

பொறையாறு,

மயிலாடுதுறை நாடாளு மன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரவு திரட்டும் பிரசார பொதுக்கூட்டம் செம்பனார் கோவிலில் நடந்தது.

கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதா வது:-

மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் புதுக் கோட்டை, தஞ்சை, கடலூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களை அழிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்கள் முற்றிலும் கைவிடப்படும். விவசாயி களின் நலன்காக்கும் வகையில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக மாற்ற பாடுபடுவோம்.

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியால் மட்டுமே சிறுபான்மை, பிற்படுத்தப் பட்ட மற்றும் ஆதிதிராவிட மக்களின் பாதுகாவலனாக திகழ முடியும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பதவி வழங்கிய சசிகலாவுக்கு துரோகம் செய்து விட்டனர்.

சேலம்-சென்னை 8 வழி சாலை அமைக்கப்பட்டால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப் படுவார்கள் என்று கூறி பா.ம.க. போராட்டங்களை நடத்தியது. மேலும் இந்த திட்டத்தை ரத்து செய்ய கோரி அன்புமணி ராமதாஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் தற்போது எந்த காரணத்துக்காக பா.ம.க. வினர் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்தார்கள் என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story