சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள் தேர்தல் செலவின பதிவேடுகள் தாக்கல்

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகளை தாக்கல் செய்தனர்.
அரியலூர்,
சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் தேர்தல் செலவின பதிவேடுகள் மற்றும் கணக்கு அறிக்கைகளின் மீதான முதற்கட்ட ஆய்வுகள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்களான துர்காதத், மனோஜ்குமார் பந்தோகி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தேசிய- மாநில அளவிலான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்த வேட்பாளர்களின் கணக்குகள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களின் கணக்குகள் மற்றும் இதர வேட்பாளர்களின் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின்போது வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதற்காக செலவிடப்பட்ட செலவினங்கள் தொடர்பான விவரங்கள் தேர்தல் செலவின கணக்குகள் மற்றும் பதிவேடுகள் ஆகியவை வேட்பாளர்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்களால் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், நேற்று நடைபெற்ற ஆய்வுகளில் 5 வேட்பாளர்களின் சார்பில் அவர்களது முகவர்கள் பங்கேற்று தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்தனர். இந்த ஆய்வில், பங்கேற்காத வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், இந்திய தேர்தல் ஆணையம் மூலமாக காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். உரிய விளக்கங்கள் அளிக்காதவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான 2-ம் கட்டம் ஆய்வு வருகிற 10-ந் தேதியும், மூன்றாம் கட்ட ஆய்வுகள் வருகிற 15-ந் தேதியும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. நேற்று நடந்த முதற்கட்ட ஆய்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேஷ்குமார், தேர்தல் தனி தாசில்தார் சந்திரசேகரன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story