பாளையங்கோட்டையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்


பாளையங்கோட்டையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2019 3:00 AM IST (Updated: 6 April 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை,

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் முடிவடைந்து விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் பாளையங்கோட்டை வடக்கு ஐகிரவுண்டு ரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் வைத்து திருத்தப்பட்டு வருகிறது. இதில் நெல்லையை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டு விடைத்தாள்களை திருத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது. ஆனால் ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. மாறாக இன்றும் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பயிற்சி வகுப்புக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே இன்று தெலுங்கு வருட பிறப்பையொட்டி விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டனர்.

இதற்கு கல்வி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்தும், விடுமுறை அளிக்க கோரியும் ஆசிரியர்கள் நேற்று பிற்பகலில் திடீர் போராட்டம் நடத்தினர். பள்ளிக்கூட வளாகத்தில் திரண்டு நின்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story