ஆரஞ்சு அற்புதம்


ஆரஞ்சு அற்புதம்
x
தினத்தந்தி 7 April 2019 3:30 AM GMT (Updated: 6 April 2019 3:30 PM GMT)

உடல் இயக்கம் சுறுசுறுப்புடன் நடைபெற ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். சோர்வை விரட்டி மன நிலையை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் ஆற்றலும் அதற்கு இருக்கிறது.

 காலை உணவை சாப்பிட்ட பிறகோ அல்லது உடற்பயிற்சி செய்த பிறகோ ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். அதில் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் ஏராளம் உள்ளன.

தினமும் ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் மூளை உறைவு பாதிப்பு 24 சதவீதம் குறையும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாதம் வராமல் தடுக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் ஆரஞ்சுக்கு இருக்கிறது. அதில் இருக்கும் வைட்டமின் சி சத்து இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் நேராமல் காக்கும். ஆரஞ்சு சாறில் ஆன்டி ஆக்சிடெண்ட் நிறைந்திருக்கிறது.

அது சருமத்திற்கு பொலிவு சேர்க்கும். சுருக்கங்கள் நேராமல் தற்காத்துக்கொள்ள வழிவகை செய்யும். இளமையை பாதுகாக்கும். கோடை காலங்களில் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருக வேண்டும். சூரிய கதிர்வீச்சு பிரச்சினையில் இருந்து சருமத்தை காக்க உதவும். ஆரஞ்சு ஜூஸில் கலோரி குறைவாகவே இருக்கிறது. அதில் கொழுப்பு இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் ஆரஞ்சு ஜூஸ் அவசியம் பருகி வரவேண்டும்.

ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். மூட்டு வலிக்கும் நிவாரணம் தேடி தரும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் சிட்ரேட் அதிக செறிவு கொண்டவை. ஆரஞ்சு ஜூஸ் பருகுவதன் மூலம் சிறுநீரக கற்களால் ஏற்படும் வலியில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

Next Story