விழுப்புரம் நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு


விழுப்புரம் நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 7 April 2019 3:45 AM IST (Updated: 6 April 2019 9:59 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் 3,234 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இதில் 161 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும், 91 வாக்குச்சாவடிகள் மிக பதற்றமானவையாகவும் கண்டறியப்பட்டு அந்த வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் அமைதியாக நடைபெறவும், வாக்காளர்கள் எந்தவித அச்சமும் இன்றி வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றலாம் என்பதையும், போலீஸ் பாதுகாப்பு பலமாக உள்ளது என்பதை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் விழுப்புரம் நகரில் நேற்று முன்தினம் மாலை போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், இன்ஸ்பெக்டர்கள் ராஜன், வீரமணி, ராபின்சன், சுரேஷ்பாபு மற்றும் போலீசார், சிறப்பு காவல்படையினர், ஊர்காவல் படையினர் என 200-க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு கவசங்களுடன் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திரு.வி.க. வீதி, காந்தி சிலை வழியாக வந்து அங்கிருந்து வி.மருதூர், கந்தசாமி லே-அவுட், கே.கே.சாலை, பழைய பஸ் நிலையம், நான்குமுனை சந்திப்பு வரை சென்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Next Story