வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 6 April 2019 10:30 PM GMT (Updated: 6 April 2019 8:21 PM GMT)

விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே மலம்பட்டி, நீர்பழனி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு ஆகிய ஊர்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஆவூர்,

விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே மலம்பட்டி, நீர்பழனி, ஆம்பூர்பட்டி, நால்ரோடு ஆகிய ஊர்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு விராலிமலை தாசில்தார் சதீஷ் சரவணக்குமார் தலைமை தாங்கினார். நீர்பழனி வருவாய் ஆய்வாளர் நிர்மலா முன்னிலை வகித்தார். அந்தந்த ஊர்களில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். இதில் கலந்து கொண்டவர்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பதற்கு யாரிடமும் பணம் வாங்கக்கூடாது, உங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல, வாக்குப்பதிவு அன்று அனைவரும் வாக்குப்பதிவு மையத்திற்கு சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். ஊர்வலத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் செந்தில்குமார், செல்லப்பாண்டியன், சதீஷ்முகமது, கவிச்சக்ராணு, சிதம்பரம் மற்றும் கிராம உதவியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினர். 

Next Story