கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.
குளித்தலை,
குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதியில், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி (தி.மு.க) சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பொதுமக்களின் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதை முழுமையாக தீர்த்துதருவேன். மற்ற கட்சி வேட்பாளர்களை வைத்து என்னை எடைபோட வேண்டாம். என்னை வெற்றி பெறச்செய்தால் லாலாபேட்டை ரெயில்வே கேட் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசி உரிய ரெயில்வே துறை அதிகாரிகளிடம் தெரிவித்து மக்களின் தேவைகேற்ப அதை செய்து தருவேன்.
பஞ்சப்பட்டி ஏரிக்கு...
மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களை விவசாய வேலைக்கு பயன்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றி தருவேன். பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்பும் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதி போதவில்லையெனில், எனது சொந்த நிதியில் இருந்து இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றி தருவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாக்குசேகரிப்பின்போது கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய செயலாளர் உமாபதி, எஸ்.ஆர்.எம். சென்னை மருத்துவக்கல்லூரி தலைவர் சிவக்குமார், இந்திய ஜனநாயக கட்சி பொது செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் வெங்கடேசன், கொள்கைபரப்பு செயலாளர் ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story