மும்பையில் நாட்டு துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது கஞ்சா வைத்திருந்தவரும் சிக்கினார்


மும்பையில் நாட்டு துப்பாக்கிகளுடன் 3 பேர் கைது கஞ்சா வைத்திருந்தவரும் சிக்கினார்
x
தினத்தந்தி 8 April 2019 3:00 AM IST (Updated: 8 April 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் நாட்டு துப்பாக்கிகளுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கஞ்சா வைத்திருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி மும்பையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ஆயுதம், மது மற்றும் கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதில், மதுவுடன் 6 பேர் சிக்கினார்கள். போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த மதுவை பறிமுதல் செய்தனர். இந்த மதுவின் மதிப்பு ரூ.12 ஆயிரத்து 54 ஆகும்.

இதேபோல் அவர்கள் நடத்திய சோதனையில், 1½ கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் 2 நாட்டுத்துப்பாக்கி, தோட்டா மற்றும் கத்தியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் மதிப்பு ரூ.21 ஆயிரம் ஆகும்.

மேற்படி கைதான 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story