மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் இறுதிக்கட்ட பணி - கலெக்டர் தலைமையில் நடந்தது
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் இறுதிக்கட்ட பணி கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது.
தேனி,
தேனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் வருகிற 18-ந்தேதி நடக்க உள்ளது. அதையொட்டி வாக்குச்சாவடி வாரியாக பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் இறுதிக்கட்ட பணி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பல்லவி பல்தேவ் தலைமையில் நடந்தது.
தேர்தல் பொது பார்வையாளர் உபேந்திர நாத் சர்மா, பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பொது பார்வையாளர் சரளா ராய் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இந்த பணிகள் நடந்தன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் கணினி மூலம் வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறியதாவது:-
வாக்குச்சாவடி வாரியாக பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடும் செய்யும் இறுதி கட்ட பணி நடந்தது. அதன் அடிப்படையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் அங்கம் வகிக்கும், சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 241 வாக்குச்சாவடி மையங்களுக்கு 314 கட்டுப்பாட்டு கருவிகள், 578 வாக்குப்பதிவு எந்திரங்கள், 314 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்கள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 322 வாக்குச்சாவடி மையங்களுக்கு 419 கட்டுப்பாட்டு கருவிகளும், 772 வாக்குப்பதிவு எந்திரங்களும், 418 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 313 வாக்குச்சாவடி மையங்களுக்கு 370 கட்டுப்பாட்டு கருவிகளும், 740 வாக்குப்பதிவு எந்திரங்களும், 392 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும், பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 296 வாக்குச்சாவடி மையங்களுக்கு 350 கட்டுப்பாட்டு கருவிகளும், 700 வாக்குப்பதிவு எந்திரங்களும், 370 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 314 வாக்குச்சாவடி மையங்களுக்கு 371 கட்டுப்பாட்டு கருவிகளும், 742 வாக்குப்பதிவு எந்திரங்களும், 393 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 295 வாக்குச்சாவடி மையங்களுக்கு 351 கட்டுப்பாட்டு கருவிகளும், 702 வாக்குப்பதிவு எந்திரங்களும், 372 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் வழங்கப்பட்டு உள்ளன. தேனி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1,781 வாக்குச்சாவடி மையங்களுக்கு 2,175 கட்டுப்பாட்டு கருவிகளும், 4,234 வாக்குப்பதிவு எந்திரங்களும், 2,259 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதுபோல், இடைத்தேர்தல் நடக்கும் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. அந்த வகையில், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 313 வாக்குச்சாவடி மையங்களுக்கு 370 கட்டுப்பாட்டு கருவிகளும், 740 வாக்குப்பதிவு எந்திரங்களும், 392 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 296 வாக்குச்சாவடி மையங்களுக்கு 350 கட்டுப்பாட்டு கருவிகளும், 350 வாக்குப்பதிவு எந்திரங்களும், 370 யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் எந்திரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story