ஆரணி, மயிலம் சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் வாக்கு சேகரிப்பு


ஆரணி, மயிலம் சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 9 April 2019 4:00 AM IST (Updated: 9 April 2019 3:10 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி, மயிலம் சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆரணி,

தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று செய்யாறு தாலுக்காவில் உள்ள ஆரணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேல்நாகரம்பேடு, மேல்மட்டை விண்ணமங்கலம், கரிக்காத்தூர், முனுகப்பட்டு, மேல்சீசமங்கலம், திருமணி உள்பட 16 கிராமங்களிலும், அதனை தொடர்ந்து மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் வல்லம், மருதேரி, கல்லேரி, கொங்கராம்பட்டு, கீழையூர், மணியம்பட்டு, ரெட்டணை, செங்கமேடு, தென்புத்தூர், நாகாந்தூர், மருர், கீழ்மாம்பட்டு, அணிலாடி, கல்லாடிகுப்பம், கீழ்வயலாமுர், மேல்கூடலூர் உள்பட பல்வேறு கிராமங்களிலும் வாக்கு சேகரித்தார்.

அப்போது டாக்டர் எம்.கே.விஷ்ணுபிரசாத் பேசுகையில், மத்தியில் நிலையான ஆட்சி ராகுல்காந்தி தலைமையில் அமைய வேண்டும். ஆளுங்கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்கள், அதனை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள். அவை அனைத்தும் உங்கள் வரிப்பணம். தமிழகத்தில் எண்ணற்ற ஆற்று மேம்பாலங்கள், அணைகள் காங்கிரஸ் ஆட்சி காலத்திற்கு பிறகு மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில்தானே கட்டப்பட்டன. விவசாயிகளின் வங்கி கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற கை சின்னத்திற்கு வாக்களியுங்கள்’ என்றார்.

பிரசாரத்தின் போது தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆர்.சிவானந்தம், செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏ.க்கள் அம்பேத்குமார், கே.வி.சேகரன், மயிலம் டாக்டர் மாசிலாமணி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கர், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் தவணி வி.பி.அண்ணாமலை, மாவட்ட துணைத்தலைவர் அருணகிரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார், மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் டாக்டர் எஸ்.வாசுதேவன் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

Next Story