வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கினால் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்


வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கினால் புகார் தெரிவிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 9 April 2019 4:15 AM IST (Updated: 9 April 2019 4:14 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்கினால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

கடலூர், 

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகளை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கவும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர்.

பொது பார்வையாளராக கணேஷ் பி.பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தல் போன்ற பல்வேறு பணிகளை கவனித்து வருகிறார். இது தவிர செலவின பார்வையாளர்களும் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவது தொடர்பாக புகார் தெரிவிக்க வருமான வரித்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்களும், அவர்களின் செல்போன் எண்களும் வருமாறு:-

கடலூர் நாடாளுமன்ற தொகுதி வருமான வரித்துறை துணை இயக்குனர் நிஷாந்த்ராவ்- செல்போன் எண்: 94454 67536, வருமான வரி அலுவலர்கள் ஜிவாச்-94459 54362, அயுஷ்குப்தா- 94459 53659,

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வருமான வரித்துறை துணை இயக்குனர் கண்ணன்- 94454 67412, வருமான வரி அலுவலர்கள் அசோக்குமார்- 94459 54801, மங்கையர்க்கரசி -94459 55623, வில் விஜயன்-94459 55534.

மேற்கண்ட எண்களில் புகார் தெரிவிக்கும் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.

மேற்கண்ட தகவலை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story