மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பட்டியல் பொருத்தும்பணி தொடங்கியது
ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் பட்டியல் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது.
ஆரணி,
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடந்தன. அதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆரணி சட்டமன்ற தொகுதியில் 311 வாக்குச்சாவடிகள் உள்ளன. இங்கு பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி.வி.பேட் எந்திரங்கள் கலெக்டர் அலுவலகத்திலிருந்து ஆரணி தாலுகா அலுவலகத்திற்கு 10 நாட்களுக்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன. அந்த எந்திரங்கள் தனி அறையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.
நேற்று காலை ‘சீல்’ வைக்கப்பட்ட அறை ஆரணி நாடாளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இல.மைதிலி தலைமையில் திறக்கப்பட்டது. அப்போது இந்த தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ், நாம் தமிழர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில்வேட்பாளர் பெயர் பட்டியல் (பேலட் சீட்) பொருத்தும் பணி, செயல்படுத்தும் முறை குறித்த செயல்விளக்கம் செய்து காண்பித்து வேட்பாளர் பட்டியல் பொருத்தும் பணி தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியின்போது ஆரணி தாசில்தார் தியாகராஜன், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சங்கர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி, வட்ட வழங்கல் அலுவலர் மணி, தேர்தல் உதவி தாசில்தார் திருநாவுக்கரசு, மண்டல துணை தாசில்தார்கள் சத்தியன், ரவிச்சந்திரன் உள்பட அரசு அலுவலர்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story