மாவட்டத்தில், பணம் வைத்து சூதாடியதாக 16 பேர் கைது


மாவட்டத்தில், பணம் வைத்து சூதாடியதாக 16 பேர் கைது
x
தினத்தந்தி 10 April 2019 4:15 AM IST (Updated: 10 April 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் ஜனபர் தெரு மாரியம்மன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை சேர்ந்த பிரபாகர் (வயது 42), அரூர் வெங்கட்ராமன் (35), ஓசூர் வாணியர் தெரு பவன் (28), அலசநத்தம் சாலை நவீன்குமார் (29), மொரப்பூர் சிவலிங்கம் (48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,300 பறிமுதல் செய்யப்பட்டது.

சூளகிரி போலீசார் கோனேரிப்பள்ளி அரசு பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய ஓசூர் முனிதேவி நகர் ரபிக் (37), நல்லகான கொத்தப்பள்ளி கிருஷ்ணமூர்த்தி (30), கோனேரிப்பள்ளி வெங்கட்ராஜ் (34), முரளி (38), பெரிய சப்படி நாகேஷ் (40), குருபசப்படி ரவி (34) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,850 பறிமுதல் செய்யப்பட்டது.

மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் மற்றும் போலீசார் பேளகொண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்த அருண்குமார் (35), பேளகொண்டப்பள்ளி முருகேஷ் (36), தளி நவீன் (28), மதகொண்டப்பள்ளி ரமேஷ் (34), ஓசூர் ராம்நகர் மாயூபேக் (30) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,140 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story