வானவில் : ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ்


வானவில் : ஜீப் காம்பஸ் ஸ்போர்ட் பிளஸ்
x
தினத்தந்தி 10 April 2019 12:15 PM IST (Updated: 10 April 2019 12:15 PM IST)
t-max-icont-min-icon

மாடலாக விளங்கும் ஜீப் தற்போது புதிதாக ஸ்போர்ட் பிளஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

எஸ் .யு.வி. மாடலில் அதிகம் விரும்பப்படும் மாடலாக விளங்கும் ஜீப் தற்போது புதிதாக ஸ்போர்ட் பிளஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.15.99 லட்சமாகும். இதில் டீசல் மாடல் விலை ரூ.16.99 லட்சமாகும். முந்தைய மாடலைக் காட்டிலும் இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக 16 அங்குல சில்வர் அலாய் சக்கரங்கள், கருப்பு நிற ரூப் ரெயில் ஆகியவற்றோடு பின்புற கண்ணாடி, மேற்கூரை, கதவுகள் ஆகியவற்றிலும் கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளது. ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட பல வசதிகள் இதில் தரப்பட்டுள்ளன.

உள்புறத்தில் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, 5 அங்குல இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே, சாவி தேவைப்படாத நுட்பம், பேட்டரியில் மடங்கி விரியும் வகையிலான ரியர் வியூ மிரர் ஆகியன இதன் சிறப்பம்சமாகும். முன்பகுதியில் 2 ஏர் பேக்குகள், ஏ.பி.எஸ்., இ.எஸ்.சி. மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் இதில் உள்ளன.

இது 163 ஹெச்.பி. திறன், 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் என்ஜின் கொண்ட டீசல் மாடலும் வந்துள்ளது. இரு மாடல்களுமே 6 கியர்களைக் கொண்டவை. காம்பஸ் மாடலுக்கு இருந்த வரவேற்பு ஸ்போர்ட் மாடலுக்கும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.



Next Story