வானவில் : சிட்ரோயன் சி 5 ஏர் கிராஸ்
சிட்ரோயன் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.
கார் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் சிட்ரோயன் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் இப்போதுதான் ‘சி5 ஏர்கிராஸ்’ மாடலை அறிமுகம் செய்துள்ளது. சி5 ஏர் கிராஸ் மாடலானது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இதையடுத்து ஐரோப்பிய நாடுகளில் இது அறிமுகமானது. எஸ்.யு.வி. அடிப்படையிலான இந்த கார் 4,500 மி.மீ நீளமும், 1840 மி.மீ. அகலமும், 1,670 மி.மீ. உயரமும் கொண்டது. முந்தைய மாடலை விட 25 மி.மீ கூடுதல் நீளமும் 10 மி.மீ. அதிக உயரமும் கொண்டது. இரண்டு நிறம் கொண்ட டேஷ் போர்டு, ஸ்பிளிட் ஏர் வென்ட் கொண்டது. இதில் பாதுகாப்பு அம்சத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இதற்காக பல ஏர் பேக்குகள் உள்ளன. அதேபோல பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், ஸ்மார்ட் ஹெட்லைட் கொண்டது. அதுவே ஹை பீம் செய்யும். அட்டென்ஷன் அசிஸ்ட், திடீரென சாலையை கடப்பதை உணர்வது, மலை பகுதிகளில் நிறுத்தக் கூடிய ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உட்பட பல வசதிகள் உள்ளன. இதில் 8 அங்குல தொடு திரை உள்ளது. ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, ஸ்டியரிங்கிலேயே கண்ட்ரோல் வசதி கொண்டது.
இதில் பெட்ரோல் மாடலும், 2 டீசல் மாடலும் வந்துள்ளன. பெட்ரோல் மாடல் 130 ஹெச்.பி. திறன், 1.2 லிட்டர் டர்போ என்ஜினைக் கொண்டது. டீசல் மாடல் 130 ஹெச்.பி. திறன் மற்றும் 1.5 லிட்டர் என்ஜினும், 180 ஹெச்.பி. திறன், 2 லிட்டர் என்ஜினைக் கொண்டதாக வந்துள்ளது. 6 கியர்களைக் கொண்ட மாடல் மானுவல் டிரான்ஸ்மிஷன் வசதியோடும், 8 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் மாடலோடும் வந்துள்ளது.
நான்கு சக்கர சுழற்சி கொண்ட மாடலையும் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம். இந்த மாடல் கார்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிகே பிர்லா ஆலையில் தயாராகின்றன. இதற்கான என்ஜின் ஓசூரில் உள்ள நிறுவன ஆலையில் தயாராகின்றன. திருவள்ளூரில் முன்னர் மிட்சுபிஷி லான்சர் கார்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
இப்போது இந்த ஆலையில் மிட்சுபிஷி எஸ்.யு.வி. மாடல்கள் மட்டும் தயாராகிறது. இனிமேல் இங்கு பிரான்ஸின் சிட்ரோயன் கார்களும் தயாராகும்.
Related Tags :
Next Story