வானவில் : மனதை மகிழ்ச்சியாக்கும் ஹெட்போன்


வானவில் : மனதை மகிழ்ச்சியாக்கும் ஹெட்போன்
x
தினத்தந்தி 10 April 2019 2:39 PM IST (Updated: 10 April 2019 2:39 PM IST)
t-max-icont-min-icon

உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது.

மூளையுடன் தொடர்பு கொண்டு மனதை அமைதிபடுத்தும் பல ஹெட்போன்கள் மார்க்கெட்டில் வந்துவிட்ட போதிலும் அமெரிக்க நிறுவனம் ஒன்றின் கண்டுபிடிப்பான இந்த ‘நெர்வனா ஹெட்போன்’ பலரது கவனத்தை கவர்ந்துள்ளது.

கையில் வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு ஜெனெரேட்டருடன் கிடைக்கிறது இந்த ஹெட் போன். இவ்விரண்டையும் சேர்த்து உபயோகிக்கும் போது மூளை நரம்புகளை எழுச்சி பெறச்செய்து டோபமைன் என்றழைக்கக்கூடிய மகிழ்ச்சிக்கான ஹார்மோன் சுரக்க செய்கிறது.

மூளையில் இருக்கும் வாகஸ் என்ற நரம்பு தூண்டப்படுவதால் இவ்விதம் நிகழ்கிறதாம். இந்த நரம்பு மனஅழுத்தத்திலிருந்து நம்மை ரிலாக்ஸ் செய்யும்.

இது தூண்டப்படுவதால் கவலையின்றி மகிழ்ச்சியாக இருக்கலாம். பாடல்களை கேட்டு ரசிக்கும் போதே நமது மனநிலையை சரி செய்கிறது. வெளியிலிருந்து கேட்கும் இயற்கை சத்தங்களுக்கு மூளையை நல்ல முறையில் ரியாக்ட் செய்ய வைக்கிறது.

வாழ்வியல் மற்றும் ஆரோக்கியத்திற்கான விருதையும் இது பெற்றிருக்கிறது. இதனால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. இதன் விலை ரூ.19,650.


Next Story