வானவில் : ‘ஹெய்ர் பியூரி கூல்’ ஏர் கண்டிஷனர்
ஏ.சி. வாங்க மக்கள் கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
கோடை காலம் நெருங்கிவிட்டது. இதனால் வீடுகளில் ஏ.சி. வாங்க மக்கள் கடைகளுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் பலவும் புதுப்புது மாடல் ஏர் கண்டிஷனர்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஹெய்ர் நிறுவனம் பியூரி கூல் ஏர் கண்டிஷனரை அறிமுகம் செய்துள்ளது.
இவை 1 டன் மற்றும் 1.5 டன் எடை கொண்டவையாக வந்துள்ளன. இதில் 1.5 டன் எடையுள்ள ஹெச்.எஸ்.யு.19 ஜே.எஸ்.5 மாடல் விலை ரூ.1 லட்சமாகும். ஒரு டன் ஹெச்.எஸ்.யு.12 ஜே.எஸ்.5 மாடல் விலை ரூ.76,500 ஆகும். இதேபோல ஹெச்.எஸ்.யு.19 ஜே.டபிள்யூ 3-ன் விலை ரூ.74,500 ஆகவும், ஹெச்.எஸ்.யு.12ஜே.டபிள்யூ 3 மாடல் விலை ரூ.69,500 ஆகவும் நிர்ணயித்துள்ளது.
இந்த ஏ.சி.க்கள் அனைத்துமே அறையினுள் தூய்மையான காற்று நிலவ உதவுகிறது. காற்றில் கலந்துள்ள தூசி, பூஞ்சை, செல்லப் பிராணிகளின் பொடுகு, சமையலறை நெடி போன்றவற்றை உறிஞ்சி சுத்தமான காற்றை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய செயல்பாட்டுக்கு உதவும் வகையில் ஐ.எப்.டி. எனப்படும் இன்டென்ஸ் பீல்டு டைஎலெக்ட்ரிக் பில்டர் இதில் உள்ளன. இது காற்றில் 2.5 பி.எம். அளவு வரை மாசுக்களை சுத்தப்படுத்தும். காற்றில் கலந்துள்ள மாசுக்களில் 99.99 சதவீதம் வரை சுத்திகரிப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது. இந்த ஐ.எப்.டி. பில்ட்டரை சுத்தப்படுத்தவோ அல்லது மாற்ற வேண்டிய அவசியமும் கிடையாது.
இதற்கென சுயமாக சுத்தப்படுத்திக் கொள்ளும் இன்வெர்ட்டர் தொழில்நுட்பம் இதில் புகுத்தப்பட்டுள்ளது. இது 65 சதவீத அளவுக்கு மின்சாரத்தையும் சேமிக்கும். இதை வை-பை மூலமும் செயல்படுத்த முடியும். மேலும் இதில் டர்போ கூலிங் தொழில்நுட்பம் உள்ளதால் இது விரைவில் அறையை குளிர்ச்சியடைய செய்யும்.
Related Tags :
Next Story