வானவில் : ஸ்மார்ட் ஜாக்கெட்
ஸ்மார்ட் கருவி உருவாகி வரும் இந்நாளில் புது வரவாக வந்திருக்கிறது ஸ்மார்ட் ஜாக்கெட்.
தினமும் ஒரு ஸ்மார்ட் கருவி உருவாகி வரும் இந்நாட்களில் புது வரவாக வந்திருக்கிறது இந்த ஸ்மார்ட் ஜாக்கெட். இது அணிந்து கொள்ள மிகவும் லைட் வெயிட்டாக இருக்கும்.
வெளியே இருக்கும் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வேண்டிய அளவில் நாம் இந்த ஜாக்கெட்டை குளிர்விக்கவோ, வெப்பமாக்கவோ செய்யலாம். ஆச்சரியம் என்னவென்றால் இந்த ஜாக்கெட் நம் சொல்பேச்சு கேட்கும்.
அதாவது நம்முடைய குரல் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும். குளிர் பிரதேசங்களுக்கு செல்லும் போது நம்முடைய கிளவுஸை மறந்து விட்டால் கவலை பட வேண்டியதில்லை. இந்த ஜாக்கெட்டின் பைகளுக்குள் கைகளை நுழைத்துக் கொண்டால் வெப்பமாக வைத்திருக்கும்.
நம்முடைய போனையும் கூட இந்த ஸ்மார்ட் ஜாக்கெட் சார்ஜ் செய்கிறது. இதற்கென்று பிரத்யேகமாக எந்த கவனிப்பும் தேவையில்லை. மற்ற துணிகளை போல சாதாரணமாக கையாலோ வாஷிங் மெஷினிலோ துவைக்கலாம்.
Related Tags :
Next Story