தேர்தல் விதிமுறை மீறல்: அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. கட்சியினர் மீது வழக்கு


தேர்தல் விதிமுறை மீறல்: அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. கட்சியினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 11 April 2019 4:15 AM IST (Updated: 11 April 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அ.ம.மு.க., அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் மீது 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிவகங்கை,

தமிழகம் முழுவதும் வருகிற 18-ந் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. சுவர் விளம்பரம் அழிப்பது, கொடிக்கம்பங்கள் அகற்றுவது, போஸ்டர்களை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் நடந்தது.

அத்துடன் தேர்தல் விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் வேட்பாளர்களுக்கு வரவேற்பு அளித்த போது கூடுதலான கார்களில் வந்தது, அனுமதியின்றி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தியது.

வெடி வெடித்தது, அனுமதி பெறாமல் தேர்தல் அலுவலகம் திறந்தது என தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், சமூக அமைப்புகள் மீது இது வரை மாவட்டம் முழுவதும் மொத்தம் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Next Story