சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 11 April 2019 4:00 AM IST (Updated: 11 April 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலைப்பால் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழியில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருமுலைப்பால் திருவிழா இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, வாஸ்துசாந்தி, மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

நேற்று காலை ரிஷப லக்கனத்தில் பஞ்சமூர்த்திகளை எழுந்தருள செய்து, திருமுலைப்பால் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரம்மபுரீஸ்வரர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்திற்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் திருமுலைப்பால் திருவிழா கொடியேற்றப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் உள்ள சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story