வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு


வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை தேர்தல் பார்வையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 11 April 2019 4:00 AM IST (Updated: 11 April 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்ட வசதிகளை தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி எளம்பலூர், எசனை, நொச்சியம், கோனேரிபாளையம், அரணாரை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்ட வசதிகளை தேர்தல் பார்வையாளர் சந்திரமோகன், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி, குடிநீர் வசதி, சக்கர நாற்காலி வசதி உள்ளிட்டவைகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளனவா? என பார்வையிட்டனர். மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வாக்குச்சாவடி மையங்களில் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும், மேலும் தேர்தல் நாளன்று வாக்காளர்களின் வசதிக்காக அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சாமியானா பந்தல் அமைக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாற்றுத்திறனாளி வசதிகளுக்கான பார்வையாளர் உத்தரவிட்டார். அவர்களுடன் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மகளிர் திட்ட இயக்குனர் தேவநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி ஆகியோர்உடன் இருந்தனர். 

Next Story