திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் அமீத்குமார் ஆய்வு


திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் அமீத்குமார் ஆய்வு
x
தினத்தந்தி 10 April 2019 10:45 PM GMT (Updated: 2019-04-11T01:44:18+05:30)

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவிற்கு தேவையான படிவங்கள், கையேடு, பேப்பர், பசை உள்ளிட்ட 98 வகையான பொருட்கள் புதுக்கோட்டைக்கு வந்துள்ளது.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவிற்கு தேவையான படிவங்கள், கையேடு, பேப்பர், பசை உள்ளிட்ட 98 வகையான பொருட்கள் புதுக்கோட்டைக்கு வந்துள்ளது. இந்த பொருட்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,537 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங் களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள பொருட்கள் அனைத்தும் சரியாக, தயார் நிலையில் உள்ளனவா என்பது குறித்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் அமீத்குமார், மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான உமா மகேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் வட்டாட்சியர் (தேர்தல்) திருமலை, வட்டாட்சியர் சார்லஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story