தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் காட்டு தீயில் கருகி வரும் மரங்கள்


தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளில் காட்டு தீயில் கருகி வரும் மரங்கள்
x
தினத்தந்தி 11 April 2019 4:00 AM IST (Updated: 11 April 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் உள்ள வனப்பகுதிகளில் மரங்கள் காட்டு தீயில் கருகி வருகின்றன.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது இந்த வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அங்குள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இன்றி வறண்டு விட்டன.

இதன் காரணமாக தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. இவ்வாறு வரும் வன விலங்குகள் சாலையை கடக்கும் போது வாகனங்கள் மோதி இறக்கும் சம்பவமும் அவ்வப்போது நடைபெறுகிறது.

மேலும் காடுகளில் உள்ள மரங்கள் பல காய்ந்து போய்விட்டன. கடும் வெயில் காரணமாக அடிக்கடி வனப் பகுதியில் உள்ள மரங்களில் தீப்பிடித்து எரிகின்றன. வனப்பகுதியில் பல இடங்களில் மரங்கள் தீயில் கருகி சாம்பலாகி விட்டன. காட்டு தீயில் சிக்கி வனவிலங்குகளும் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, வனப்பகுதியில் தண்ணீர் தொட்டி அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி வனவிலங்குகளை பாதுகாத்திட வேண்டும் எனவும், காட்டு தீ ஏற்படாமல் தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story