‘நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் குரலும் ஒலிக்க வேண்டும்’ சுயேச்சையாக போட்டியிடும் திருநங்கை பிரசாரம்
நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் குரலும் ஒலிக்க வேண்டும். என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று துண்டுபிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் அவர் வாக்குகள் கேட்டு வருகிறார்.
சென்னை,
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மந்தைவெளியை சேர்ந்த திருநங்கை ராதா(வயது 50) போட்டியிடுகிறார். ‘கணினி சுட்டி’(மவுஸ்) சின்னம் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு மத்தியில் அவரும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் குரலும் ஒலிக்க வேண்டும். என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று துண்டுபிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் அவர் வாக்குகள் கேட்டு வருகிறார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து திருநங்கை ராதா கூறியதாவது:-
திருநங்கை என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி என்றைக்கு அழைத்தாரோ? அன்றில் இருந்து திருநங்கைகள் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருகிறது. அனைத்துத்துறைகளிலும் திருநங்கைகள் கால்தடம் பதித்து வருகின்றனர்.
எனவே நாடாளுமன்றத்திலும், திருநங்கைகள் இடம் பெற வேண்டும். எங்களுடைய குரல் ஒலிக்க வேண்டும். அதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றேன். நான் எம்.காம் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். நான் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் என்னை வரவேற்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story