மோகனூர் பகுதியில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் வாக்கு சேகரிப்பு
மோகனூர் பகுதியில் நேற்று தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் வாக்கு சேகரித்தார்.
மோகனூர்,
தி.மு.க. கூட்டணி சார்பில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜ் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இவர் நேற்று மோகனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார்.
வகுரம்பட்டி, வசந்தபுரம், புதுப்பட்டி, வளையப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, மோகனூர், லத்துவாடி, அணியாபுரம், அரூர், அரசநத்தம், ஒருவந்தூர், ராசிபாளையம், ஆரியூர், தோளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:- என்னை தேர்ந்தெடுத்தால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தருவேன். குறிப்பாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். பிரதமராக ராகுல் காந்தியும், தமிழகத்தில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினும் பொறுப்பேற்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரசாரத்தின்போது பொதுமக்கள் வேட்பாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட வேட்பாளர் சின்ராஜ் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான காந்திசெல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. சரஸ்வதி, மோகனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் நவலடி, மோகனூர் பேரூராட்சி செயலாளர் செல்லவேல், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத் தலைவர் உடையவர், கொ.ம.தே.க. விவசாய அணி நிர்வாகி பழனிமலை, ம.தி. மு.க. நகர செயலாளர் லோகநாதன் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story