நாடாளுமன்ற தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் கலெக்டர் ரோகிணி தகவல்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 4 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையரின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணி முதல் வருகிற 18-ந் தேதி (வியாழக் கிழமை) இரவு 12 மணி வரை மதுக்கடைகள் மூடப்படு கிறது. மேலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி அன்றும் மதுபானக்கடைகள் மூடப்படும்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3 ஏ மற்றும் எப்.எல்.3 ஏஏ உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபான பார்கள் மற்றும் ஓட்டல் பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மேற்கண்ட நாட்களில் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story