தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர், அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு


தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர், அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு
x
தினத்தந்தி 12 April 2019 3:45 AM IST (Updated: 12 April 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

திருச்சி,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் பிரசாரத்தின்போது தேர்தல் நடத்தை விதிகள் மீறப்படுகிறதா? என கண்காணித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் நேற்று முன்தினம் நடந்த பிரசாரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சி கொடிகளை விதிமுறை மீறி கட்டியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா மீது எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இதேபோல் விமானநிலையம் வயர்லெஸ்ரோட்டில் வேட்பாளர் பிரசாரத்துக்கு வந்தபோது, பட்டாசு வெடித்து, உரிய அனுமதியின்றி கொடி கட்டி இருந்ததாக அ.ம.மு.க. 37-வது வார்டு செயலாளர் சக்திவேல்(40), 35-வது வார்டு செயலாளர் சிவா(30), செங்குளம்காலனி இலுப்பூர்ரோட்டில் பிரசாரத்தின்போது விதிமுறைகளை மீறி கட்சி கொடி கட்டி இருந்ததாக அ.ம.மு.க. 42-வது வார்டு செயலாளர் மனோஜ்குமார்(32), கே.கே.நகர் பகுதியில் விதிமுறை மீறி கட்சி கொடி கட்டி இருந்ததாக அ.ம.மு.க. நிர்வாகிகள் பாலாஜி(36), வெள்ளதுரை(30) என மொத்தம் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story