போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருப்பூர் போலீசார் ஆர்வத்துடன் தபால் ஓட்டு போட்டனர்


போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திருப்பூர் போலீசார் ஆர்வத்துடன் தபால் ஓட்டு போட்டனர்
x
தினத்தந்தி 12 April 2019 3:30 AM IST (Updated: 12 April 2019 4:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீசார் ஆர்வத்துடன் தபால் ஓட்டு போட்ட னர்.

திருப்பூர், 

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள நிலையில் அரசு ஊழியர் கள், போலீசார், தேர்தல் அலு வலர்களுக்கு தபால் ஓட்டுப் பதிவு கடந்த 7-ந்தேதி தொடங் கியது. இதில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் தங்கள் தொகுதிக்குட்பட்ட பயிற்சி மையங்களில் வைக்கப்பட் டுள்ள பெட்டிகளில் தபால் ஓட்டுப்பதிவு செய்தனர்.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி (தனி), பல்லடம், காங்கேயம், தாராபுரம் (தனி), உடுமலை மற்றும் மடத்துக் குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணியாற்றக் கூடிய போலீசாரிடம் இருந்து தபால் ஓட்டுக்கான விண்ணப் பங்கள் பெறப்பட்டன. இவர் களுக்கான தபால் ஓட்டுப் பதிவு மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

இந்த முகாமில் கலந்து கொண்டு போலீஸ் நிலையங் களில் பணியாற்றும் போலீ சார் ஆர்வத்துடன் வாக்களித் தனர். தபால் மூலமும் வாக்களிக்க இவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமை மாவட்ட தேர்தல் அதிகாரி யும், கலெக்டருமான கே.எஸ்.பழனிசாமி ஆய்வு மேற் கொண்டார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பிரபு, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ராகவேந்திரன், தாசில்தார் (தேசிய நெடுஞ்சாலை) அருணா மற்றும் அரசு அலுவலர்கள், போலீஸ் உதவி கமிஷனர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உள்பட தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீ சார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story