வேடசந்தூர் அருகே, ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்


வேடசந்தூர் அருகே, ரூ.2½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 April 2019 3:00 AM IST (Updated: 12 April 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே மினிலாரியில் கொண்டு சென்ற ரூ.2½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேடசந்தூர்,

வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி சோதனை சாவடியில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மினிலாரியில் அட்டை பெட்டிகள் மற்றும் சாக்கு மூட்டைகள் இருந்தன. அதனை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கொண்டு செல்வது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 67 ஆயிரம் ஆகும். உடனே புகையிலை பொருட் கள், மினிலாரியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மினிலாரி டிரைவர் கரூர் மாவட்டம் ஜல்லிஓடநாயக்கனூரை சேர்ந்த குமரேசன் (வயது 27) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story