கும்மிடிப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பலி
கும்மிடிப்பூண்டி அருகே பாலம் கட்டும் வேலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள பண்பாக்கம் காலனியை சேர்ந்தவர் காட்டையன் (வயது 43). இவர் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வேலை முடிந்து அவர் வீட்டுக்கு வந்து சேர வில்லை. இந்த நிலையில் நேற்று காலை கவரைப்பேட்டை மேம்பால பணி நடைபெறும் இடத்தில் இருந்து 600 மீட்டர் தொலைவில் 15 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தில் காட்டையன் இறந்து கிடப்பதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் அவரது மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்து கிடந்தது.
இது குறித்து கவரைப்பேட்டை போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் காட்டையனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கும்மிடிப்பூண்டியில் இருந்து தச்சூர் வரை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப்பணி மற்றும் பாலத்திற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் ஆங்காங்கே சாலைகளில் தனியார் நிறுவனம் பள்ளங்களை தோண்டி வருகிறது. ஆனால், வாகனபோக்குவரத்தை மாற்றுவழியில் செல்ல அறிவுறுத்தும் வகையில் இதற்கான அறிவிப்பு பலகைகள் எதுவும் அந்த பகுதிகளில் வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இத்தகைய பகுதிகளில் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளத்தில் விழுந்து பலியான காட்டையனுக்கு சிந்தாமணி (38) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

Related Tags :
Next Story