குண்டடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கதவு, ஜன்னலை அடித்து நொறுக்கிய மர்ம ஆசாமிகள், போலீசார் விசாரணை


குண்டடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கதவு, ஜன்னலை அடித்து நொறுக்கிய மர்ம ஆசாமிகள், போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 13 April 2019 4:44 AM IST (Updated: 13 April 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

குண்டடம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கதவு,ஜன்னலை மர்ம ஆசாமிகள் அடித்து நொறுக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடியையும் உடைத்து விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம் குண்டடம், உப்பாறு அணை ரோட்டில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

அவர்கள் அலுவலகத்தின் முன்புறம் இருந்த இரும்பு கிரில் கதவை அடித்து நொறுக்கி கீழே தூக்கிப்போட்டுவிட்டு உள்ளே நுழைந்து அலுவலக குடியிருப்பின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து உடைத்ததுடன் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பக்க கண்ணாடியையும் உடைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி குண்டடம் போலீஸ் தரப்பில் கூறும்போது, இதுவரை இதுசம்பந்தமான புகார் வரவில்லை. ஆனால் இந்த நாசவேலையில் ஈடுபட்டது யார் என்பதுகுறித்து விசாரணைநடத்தி வருகிறோம். குண்டடம் பொதுப்பணித்துறை அதிகாரியை போனில் தொடர்பு கொள்ள அழைத்தபோது அவரது போன் இணைப்பு கிடைக்கவில்லை என்றனர்.

பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இரும்பு கிரில் கதவு மற்றும் ஜன்னல் கண்ணாடிகள், காரின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story