மாவட்ட செய்திகள்

நோய் குணமாகாததால் கத்தியால் கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை + "||" + Disease heal old man commits suicide

நோய் குணமாகாததால் கத்தியால் கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை

நோய் குணமாகாததால் கத்தியால் கழுத்தை அறுத்து முதியவர் தற்கொலை
திருப்பூர் அருகே நோய் குணமாகாததால் முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

திருப்பூர்,

திருப்பூர் கரட்டாங்காட்டை சேர்ந்தவர் முருகசாமி(வயது 85). இவருடைய மனைவி ராமாத்தாள் (75). முருகசாமிக்கு ஆஸ்துமா நோய் இருந்து வந்துள்ளது. இதனால் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று விட்டு ஒரு வாரத்துக்கு முன்பு வீட்டுக்கு திரும்பியுள்ளார். மீண்டும் அவருக்கு முச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதால், தற்கொலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்று தனது மனைவியிடம் முருகசாமி கூறியுள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வீட்டு திண்ணையில் இருந்த முருகசாமி திடீரென்று தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த ராமாத்தாள் சத்தம் போட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முருகசாமி இறந்தார்.

இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை
ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
2. வெவ்வேறு இடங்களில் முதுகலை பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு இடங்களில் முதுகலை பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
3. 2 மகள்களுடன், தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பெங்களூருவில், கள்ளத்தொடர்பை கைவிட கணவர் மறுத்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. தற்கொலையை தவிர்ப்போம்
தற்கொலை என்பது குற்றமா? அல்லது தனிப்பட்டவர்களின் உரிமையா? என்ற கேள்விக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே விடைகொடுத்து விட்டாலும் தற்கொலை தீர்வா? பிரச்சினைகளின் தொடக்கமா? அதைத் தவிர்க்க முடியுமா? தடுக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
5. சேலத்தில் ரெயில் முன்பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை
சேலத்தில் ரெயில் முன்பாய்ந்து தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கடனை திருப்பி கொடுக்காததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.