மாவட்ட செய்திகள்

சேலம் அருகேமோட்டார் சைக்கிள் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி + "||" + Near Salem Motorcycle collision owner kills the owner

சேலம் அருகேமோட்டார் சைக்கிள் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி

சேலம் அருகேமோட்டார் சைக்கிள் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி
சேலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி ஓட்டல் உரிமையாளர் பலியானார்.
ஆட்டையாம்பட்டி,

சேலம் அருகே உள்ள சீரகாபாடியில் ஓட்டல் நடத்தி வந்தவர் ராஜாமணி (வயது 56). இவருடைய மனைவி சாந்தி (50). இவர்களுக்கு சரண்யா (30), நித்யா (26), பிரியா(17) என 3 மகள்கள் உள்ளனர். இதில் சரண்யா, நித்யா ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது. மேலும் ராஜாமணி, சேவாம்பாளையத்தில் தி.மு.க. அவைத்தலைவராகவும் உள்ளார்.

இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு சீரகாபாடியில் தனது ஓட்டல் முன்பு சாலையில் செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக ஒரு தனியார் கல்லூரி மாணவர் சந்தோஷ் (22) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ராஜாமணி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த சந்தோஷ் சிகிச்சைக்காக சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.