மாநில உரிமைகளை பறிக்கும் ஆட்சி மத்தியில் நடக்கிறது - முத்தரசன் குற்றச்சாட்டு
மாநில உரிமைகளை பறிக்கும் ஆட்சி மத்தியில் நடக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் புதுவையில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது முத்தரசன் பேசியதாவது:-
இந்திய நாடு இதுவரை 16 பொதுத்தேர்தல்களை சந்தித்துள்ளது. இப்போது நடைபெறும் தேர்தல் வித்தியாசமான தேர்தல். தற்போது நாட்டை பிளவுபடுத்தும் ஆட்சி மோடி தலைமையில் நடக்கிறது.
அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கி, வருமான வரித்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். கருத்துரிமை, பேச்சுரிமையை யாராலும் பறிக்க முடியாது. ஆனால் அதை மோடி அரசு பறிக்கிறது. அவருக்கு எதிராக எழுதினால் கொலை செய்துவிடுகிறார்கள்.
மாநில உரிமைகளை பறிக்கும் ஆட்சி மத்தியில் நடக்கிறது. புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. டெல்லியில் மக்களால் நிராகரிக்கப்பட்ட கிரண்பெடி புதுவையில் மக்கள் ஆட்சிக்கு தொல்லை கொடுக்கிறார். மோடி ஆட்சி மோசடி ஆட்சியாக உள்ளது.
ரபேல் விமான முறைகேடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தவறான தகவல்களை மத்திய அரசு கொடுத்தது. இத்தகைய மோசடி ஆட்சி அகற்றப்பட வேண்டும். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. வெல்லும். அங்குள்ள அடிமை ஆட்சி அகற்றப்படும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார்.
புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்தோம். ஆனால் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க.வே போட்டியிடுவதால் இங்கும் நாங்களே போட்டியிடுகிறோம். நீங்கள் உங்கள் வேட்பாளரைப்போல் நினைத்து ஆதரவு தாருங்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதன்படி ஆதரவு அளிக்கிறோம்.
நம்மை எதிர்த்து நிற்கும் கட்சி தனிநபர் சார்ந்த கட்சி. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் தேர்தல் முடிந்ததும் ரங்கசாமி தனித்து ஆட்சி அமைத்துக்கொண்டார். அவரை பச்சை துரோகி என்று ஜெயலலிதா விமர்சித்தார். தற்போது அவர்கள்தான் கூட்டணி அமைத்துள்ளனர்.
இவ்வாறு முத்தரசன் பேசினார்.

Related Tags :
Next Story