வேட்டவலத்தில் மாடுகள் வாங்க சென்றவர்களிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல்


வேட்டவலத்தில் மாடுகள் வாங்க சென்றவர்களிடம் ரூ.1¼ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 15 April 2019 4:45 AM IST (Updated: 14 April 2019 11:04 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலத்தில், வாரச்சந்தையில் மாடுகள் வாங்க சென்றவர்களிடம் இருந்து ரூ.1¼ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வேட்டவலம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை அடுத்த பழைய சித்தாமூர் கிழக்கு தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஏழுமலை (வயது 28). அதே ஊரை சேர்ந்த ஏழுமலை மகன் செந்தில் (43) மற்றும் இவர்களின் நண்பர் ஒருவர் என 3 பேர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

வேட்டவலத்தை அடுத்த நாரையூர் கூட்ரோடு பகுதியில் செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைசெல்வி தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஏழுமலையிடம் ரூ.75 ஆயிரமும், செந்திலிடம் 50 ஆயிரத்து 500 ரூபாயும் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வேட்டவலத்தை அடுத்த தளவாய்குளம் ஞாயிறு வாரச்சந்தைக்கு மாடுகள் வாங்க சென்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பறக்கும் படையினர் 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Next Story