மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில், கிறிஸ்தவர்களிடம்அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரிப்பு + "||" + In Namakkal, to Christians ADMK Candidate's   Kaliyappen vote Collection

நாமக்கல்லில், கிறிஸ்தவர்களிடம்அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரிப்பு

நாமக்கல்லில், கிறிஸ்தவர்களிடம்அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரிப்பு
நாமக்கல்லில் கிறிஸ்தவர்களிடம் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாமக்கல், 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் காளியப்பன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று காலையில் அவர் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள ‘அசெம்பிளி ஆப் காட்’ சபையில் பிரார்த்தனைக்கு வந்திருந்த கிறிஸ்தவர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது சிறுபான்மையின மக்களுக்கு அ.தி.மு.க. அரசு செய்துள்ள திட்டங்களை எடுத்துக்கூறி அவர் வாக்கு சேகரித்தார். அவருடன் அ.தி.மு.க. நகர பொருளாளர் ராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் ராஜா, வெங்கடேஷ், லியாகத் அலி, சம்பத், வடிவேல் குமார், மகளிர் அணி செயலாளர் அமுநிஷா உள்ளிட்டோர் கிறிஸ்தவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலும், எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில் அகரம், கோக்கலை, பெரியமணலி, இலுப்பிலி, மாவுரெட்டிப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களுக்கும் வேட்பாளர் காளியப்பன் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

இதற்கிடையே நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான் பாண்டியன் மோகனூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்றும், தொடர்ந்து அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள், எனவும் ஜான் பாண்டியன் பேசினார்.

இதேபோல் பாலப்பட்டி, ஒருவந்தூர், வளையப்பட்டி, கொசவம்பட்டி, தூசூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜான் பாண்டியன் பிரசாரம் செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை கூறி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரிப்பு
மோகனூர் பகுதியில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.