மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”தி.மு.க.வேட்பாளர் தனுஷ்குமார் உறுதி + "||" + "Action to cancel the selection option" DMK vendor Dhanush Kumar confirmed

“நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”தி.மு.க.வேட்பாளர் தனுஷ்குமார் உறுதி

“நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்”தி.மு.க.வேட்பாளர் தனுஷ்குமார் உறுதி
நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சங்கரன்கோவிலில் நடந்த பிரசாரத்தில் தி.மு.க.வேட்பாளர் தனுஷ்குமார் உறுதி அளித்தார்.
சங்கரன்கோவில், 

தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக தனுஷ்குமார் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். நேற்று சங்கரன்கோவிலில் இருந்து தனது பிரசாரத்தை தொடங்கிய அவர் மலையான்குளம், சிதம்பராபுரம், குருவிகுளம், அழகுநேரி, நாலுவாசன்கோட்டை, கே.ஆலங்குளம் அவனிக்கோனேந்தல், மீன்துள்ளி, வெங்கடாசலபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று திறந்த வேனில் நின்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சங்கரன்கோவிலில் அவர் பேசும்போது:-

டாக்டர் அம்பேத்கர் பெயரில் சட்ட பல்கலைக்கழகம் அமைத்தது தி.மு.க. ஆட்சியில் தான். இந்த பகுதியில் உள்ள கூலி தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன். நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசார நிகழ்ச்சியில் தி.மு.க. பிரமுகர் தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியன், தி.மு.க. நகர செயலாளர் சங்கரன், பொருளாளர் யோசேப், மாவட்ட இலக்கிய அணி சுப்பையா, பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர்மைதீன், இளைஞர் எழுச்சி பாசறை குட்டிவளவன், வக்கீல் முத்துராமலிங்கம், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் திருமாசுந்தர், சன்னாவளவன், ராவணன், சிவக்குமார் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.