“பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்து நிறைவேற்றுவேன்” அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வாக்குறுதி
“பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்து நிறைவேற்றுவேன்” என அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் வாக்குறுதி அளித்தார்.
ஆலங்குளம்,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
பரும்பு, குத்தபாஞ்சான், கலிதீர்த்தான்பட்டி, இடைகால், பள்ளக்கால் பொதுக்குடி, பனஞ்சாடி, ரெங்கசமுத்திரம், வழுதூர், செங்குளம், நந்தன்தட்டை, பாப்பாக்குடி, புதுக்கிராமம், ரஸ்தா, கீழபாப்பாக்குடி, ஓ.துலுக்கப்பட்டி, குமாரசாமிபுரம், பனையன்குறிச்சி, கபாலிபாறை, இலுப்பைகுறிச்சி ஆகிய ஊர்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வேட்பாளர் மனோஜ் பாண்டியன் பேசியதாவது:-
தி.மு.க. வேட்பாளரை போல ஆலங்குளம் பகுதி மக்களுக்கு புதிதாக தெரிந்த வேட்பாளர் நான் கிடையாது. ஏற்கனவே மக்களுக்கு நன்கு தெரிந்தவன். ஏனென்றால் நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒன்றரை கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு சமுதாய நலக்கூடம் கட்டிக் கொடுத்துள்ளேன். இந்த சமுதாய கூடத்தால் அனைத்து தரப்பு மக்களும் மிகவும் பயன் அடைந்துள்ளனர். இதே போல் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கேட்டறிந்து அதனை நிறைவேற்றுவேன். பிரதமராக மோடியை மீண்டும் தேர்ந்தெடுத்து வாரிசு அரசியலை அடியோடு அழிக்க உதவி புரிய வேண்டும். என்னை வெற்றி பெற செய்தால் தொகுதிக்கு தேவையான குடிநீர், தரமான கல்வி, சாலை வசதிகள் ஆகியவற்றை உடனுக்குடன் செயல்படுத்தி மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் பிரபாகரன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. பி.ஜி.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், மாவட்ட அவை தலைவர் வீரபாண்டியன், பாப்பாக்குடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கனகராஜ், ஆலங்குளம் நகர அ.தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், துணை செயலாளர் கணேசன், நகர எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளர் சாலமோன் ராஜா, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சேர்மபாண்டி, கரும்பனூர் இளைஞர் பாறை செயலாளர் நேரு ராஜா, ஆலங்குளம் கிளை செயலாளர் செந்தில்குமார், இணை செயலாளர் பர்வீன்ராஜ், ஆலங்குளம் நகர பா.ஜ.க. தலைவர் கணேசன், பொதுச்செயலாளர் கண்ணன், தே.மு.தி.க. ஆலங்குளம் நகர செயலாளர் பழனிசங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story