சிதம்பரம் அருகே, மொபட் மீது வேன் மோதல் -2 நண்பர்கள் பலி


சிதம்பரம் அருகே, மொபட் மீது வேன் மோதல் -2 நண்பர்கள் பலி
x
தினத்தந்தி 15 April 2019 3:45 AM IST (Updated: 15 April 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே மொபட் மீது வேன் மோதியதில் 2 நண்பர்கள் பலியாகினர்.

சிதம்பரம்,

சிதம்பரம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர்(வயது 46). இவரும், விளங்கி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(57) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும், நேற்று மாலை மொபட்டில் கண்ணங்குடியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்தனர்.

கண்ணங்குடி புறவழிச்சாலை சந்திப்பு அருகே வந்த போது, எதிரே சீர்காழியில் இருந்து சேலம் நோக்கி சென்ற வேன் வந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் மீது வேன் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சங்கர், பாலசுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி 2 பேரும் உயிரிழந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் அவர்களது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு இருவரும் பிணமாக கிடந்ததை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story