தேர்தல் டூடில்


தேர்தல் டூடில்
x
தினத்தந்தி 15 April 2019 5:35 PM IST (Updated: 15 April 2019 5:35 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த வியாழன் அன்று தொடங்கியது.

தமிழகத்தில் வருகிற வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்திய பாராளுமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் வாக்குப்பதிவின் முதல் நாளன்று கூகுள் நிறுவனம் முகப்பு பக்கத்தில் விழிப்புணர்வு டூடில் (கார்ட்டூன்) வெளியிட்டிருந்தது. அதை சொடுக்கினால் எவ்வாறு இந்தியாவில் ஓட்டளிக்கப் படுகிறது, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? வாக்குச்சாவடியை எப்படி அறிந்து கொள்வது? என்பது உள்ளிட்ட விவரங்களை காட்டும் தகவல்கள், அவை தொடர்பான இணையபக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story