புற்றுநோய், நீரிழிவை தடுக்கும் ஊதா அரிசி
வெள்ளை அரிசியில் மனம் மயங்கும் பலரும் கருப்பு மற்றும் சிவப்பு அரிசியின் மகிமையை உணர்வதில்லை.
வெள்ளை அரிசிகளைவிட இவை உடலுக்கு தேவையான பல சத்துக்களைக் கொண்டவை. தற்போது உடலுக்கு அவசியமான நோய் எதிர்ப்பொருட்களைக் கொண்ட மரபணு மாற்றத்துடன்கூடிய ஊதா அரிசியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இது புற்று நோய், நீரிழிவு மற்றும் இதய நோய்களை தடுக்கும் நோய் எதிர்ப்பொருட்களை கொண்டதாக மரபணு மாற்றம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
தெற்கு சீனாவின் வேளாண்மை பல்கலைக்கழகம் இந்த மரபணு மாற்ற அரிசியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. ஜபோனிக்கா மற்றும் இந்திகா அரிசியில் மரபணு மாற்றம் செய்யப்பட்டு இந்த புதிய அரிசி உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான 8 விதமான நிறமி மரபணுக்கள் மற்ற தானியங்கள் மற்றும் பயிர்களில் இருந்து பெறப்பட்டு இந்த அரிசிகளின் மரபணுவுடன் கலக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சேர்க்கப்பட்டுள்ள ஆந்தோசயானின் நிறமிப் பொருளானது அரிசிக்கு சிவப்பும் ஊதாவும் கலந்த வண்ணத்தை தருவதுடன், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.
இதை உணவாக பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகள் தொடர உள்ளன. சாதகமான முடிவுகள் கிடைத்தால் பிற தானியங்கள் பயிர்களிலும் இதுபோன்ற மரபணு மாற்றம் செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் என்று ஆய்வுக்குழு அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story