பேஸ்புக்கில் செயற்கை அறிவு நுட்பம்
பேஸ்புக் நிறுவனம், தங்கள் வலைத்தளத்தில் கணக்குத் தொடங்கிய பின்பு இறந்தவர்களின் செயல்படாத கணக்குகளை கண்டுபிடிக்க செயற்கை அறிவு நுட்பத்தை பயன்படுத்த இருக்கிறது.
பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களின பிறந்த நாட்களை, நண்பர்களுக்கும், அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பலருக்கும் நினைவூட்டுவது இந்த தளத்தின் சிறப்பு வசதிகளில் ஒன்றாக இருக்கிறது. நாம் நமது நண்பர்கள், உறவினர்களின் பிறந்தநாளை மறந்திருந்தாலும், இந்த வசதி நமக்கு நினைவூட்டும்.
ஆனால் இறந்த ஒருவரைப் பற்றி அவரது நண்பர்களுக்கு மறைந்தவரின் பிறந்தநாளை நினைவூட்டுவது அவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்அல்லவா? இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க செயற்கை அறிவு நுட்பத்தை பயன்படுத்த தீர்மானித்துள்ளது பேஸ்புக். ஒருவரது நண்பர்கள், உறவினர் ஒருவரின் இறப்பைப் பற்றிய செய்திகள், படங்களை வெளியிடுவதை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் இறந்துவிட்டார் என்பதை கண்டுபிடிக்கவும், அவர் பற்றிய நினைவூட்டல் தகவல்களை தவிர்க்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story