மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில்போலீசார் கொடி அணிவகுப்பு + "||" + In the district Police flag parade

மாவட்டத்தில்போலீசார் கொடி அணிவகுப்பு

மாவட்டத்தில்போலீசார் கொடி அணிவகுப்பு
நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
நாமக்கல், 

நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கும் விதமாக ராசிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து பேண்டு வாத்தியம் முழங்க புறப்பட்டது. புதிய பஸ் நிலையம், கச்சேரி தெரு, பழைய பஸ் நிலையம், சேலம் ரோடு வழியாக எஸ்.ஆர்.வி. பெண்கள் பள்ளி அருகே சென்று முடிவடைந்தது.இந்த ஊர்வலத்தில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயராகவன் (ராசிபுரம்), சண்முகம் (திருச்செங்கோடு), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்லமுத்து (ராசிபுரம்), விஜயகுமார் (வெண்ணந்தூர்), ராமகிருஷ்ணன் (பேளுக்குறிச்சி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ராசிபுரம் உட்கோட்ட ஆண், பெண் போலீசார், போக்குவரத்து போலீசார், கேரள போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர்.

வையப்பமலையில் ராசிபுரம்- திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், ராசிபுரம் துணை சூப்பிரண்டு விஜயராகவன், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

திருச்செங்கோட்டில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருச்செங்கோடு டவுன் சேலம் ரோடு கார்னர் பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த கொடி அணிவகுப்பை நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று நகர போலீஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது.